in ,

அக்ஷராவின் முகத்திரையும் கிழிந்து விட்டது.. வலையில் விழுந்த வருண்!

கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேல் எனக்கு சத்தமா பேசுனா பிடிக்காது. நான் அங்கிருந்து விலகிப் போயிடுவேன்னு கமல் சார் முன்னாடியே சத்தியம் செய்யாத குறையாக பேசிய அக்‌ஷராவின் முகமூடி கிழியத் தொடங்கி விட்டதாக நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

அக்‌ஷரா வருணை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் தான் வருண் இப்படி அக்‌ஷராவுக்காக சண்டை போடுகிறார் என்றும் அக்‌ஷராவின் வலையில் வருண் வசமாக விழுந்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

நிரூப், சிபி பண்ணது தான் தப்பு என்று ஒரு க்ரூப்பும் இல்லை இல்லை அக்‌ஷரா தான் அனைத்துக்கும் காரணம் என்றும் வெளியே பீப் போடாத குறையாக ரசிகர்களின் சண்டை ஆரம்பித்துள்ளது.

இந்த சீசனில் இதுவரை யார் நல்லவர் யார் கெட்டவர் என்றே ரசிகர்களால் கெஸ் பண்ண முடியாத அளவுக்கு அனைவரும் உள்ளனர். நண்பர்களாக பழகிக் கொண்டே நம்பிக்கை துரோகம் செய்து பழிவாங்குவது போல நடந்து கொள்ளும் ஒவ்வொரு நபரின் முகத்திரையும் கிழியத் தொடங்கி வருகின்றன.

போன சீசன் குரூபிசத்தை கான்செப்ட்டாக வைத்த பிக் பாஸ் இயக்குநர் இந்த முறை பேக் ஸ்டாபிங்கை கான்செப்ட்டாக வைத்து ஷோவை கொண்டு போகிறார் என்றும் நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர். நிரூப் பிரியங்கா தான் நல்ல நண்பர்கள் என நினைக்க வைத்து பின்பு நிரூப்பே பிரியங்காவை முதுகில் குத்துவதை எல்லாம் பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். சுருதி போகிற போக்கில் ராஜு தனக்கு இழைத்த அநீதியை போட்டு உடைத்து விட்டுப் போய் விட்டார்.

35 நாட்களுக்கு மேல் ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு சீனிலாவது அக்‌ஷரா அழும் காட்சி இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா நடக்கும் காட்சியை ட்ரோல் செய்தது போலவே அக்‌ஷராவின் அழுகை காட்சிகளை எடிட் செய்து அக்‌ஷரா ஆர்மியினரை நெட்டிசன்கள் வெறுப்பேற்றி வருகின்றனர்.

எனக்கு சத்தம் போட்டு பேசினாலே பிடிக்காது. நான் அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன். அங்கே இருந்து விலகிப் போயிடுவேன். யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடவே மாட்டேன் என பேசி வந்த அக்‌ஷராவா இது என நினைக்கும் தூண்டும் அளவுக்கு நேற்றைய எபிசோடில் அவரிடம் இருந்து அப்படியொரு சேஞ்ச் ஓவர் தெரிந்தது.

அழுமூஞ்சி அக்‌ஷராவாத்தானே இந்த பிக் பாஸ் வீடு பார்த்திருக்கு இனிமே ஆக்ரோஷ அக்‌ஷராவா மாறி விளையாடுறேன் பாரு என அக்‌ஷரா நேற்று நிரூப் மற்றும் வருண் உடன் அப்படி சண்டை போட்டதை பார்த்த ரசிகர்கள் அக்‌ஷரா உங்க முகத்திரை கிழிந்து தொங்கி விட்டது என கலாய்த்து வருகின்றனர்.

இடுப்பில் கை வைத்ததுக்கு எல்லாம் பெரிய பிரளயமே நடந்த பிக் பாஸ் வீட்டில் உடும்பு பிடியாக நிரூப் அக்‌ஷராவை மடக்கி பிடித்தும் நீ தொட்டது பிரச்சனை இல்லை. அப்படி புடிச்சா எப்படி கேம் ஆடுறதுன்னு தான் நான் கேட்டேன் என அக்‌ஷரா தனது பாயின்ட்டை எடுத்து வைத்து பேசி இருக்காரே அப்போ நிரூப் செய்தது தானே தவறு அதனால் தான் அக்‌ஷரா அப்படி ஆக்ரோஷமானார் என அவர் தரப்பு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாவனியின் காயினை ஒரு வாரமாக வருண் உடன் பிளான் போட்டு அக்‌ஷராவால் எடுக்க முடியவில்லை. ஆனால், அந்த பிளானில் என்ன வொர்க்கவுட் ஆனது என்றால் அக்‌ஷராவுக்கு ஒரு அடிமை சிக்கிட்டார். அக்‌ஷராவுக்கு ஒரு பிரச்சனைன்னா பிக் பாஸ் வீட்டில் குரல் கொடுக்க வருண் எப்படி ஓடோடி வராரு பாருங்க.. நிரூப்புடன் வருண் சண்டை போட காரணமே அக்‌ஷரா தான் என்றும் டிகோடிங் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பிக்பாஸ் ஸ்ருதியா இது.. வைரலாகும் நீச்சலுடை புகைப்படங்கள்

சார்பட்டா பரம்பரை நாயகியா இது? என்னம்மா கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க.!