Malayagam
Home » அரைகுறை ஆடையுடன் போதையில் ஆட்டம் போட இளம் பெண் பிரதமர்

அரைகுறை ஆடையுடன் போதையில் ஆட்டம் போட இளம் பெண் பிரதமர்

பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் தனது நண்பர்களுடனான பார்ட்டி ஒன்றில் மது போதையுடன் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக சன்னா மரீன்(34) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமரும் ஆவார்.

உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் ஸ்விடன் மற்றும் பின்லாந்து இணையும் ஒப்பந்தத்திற்கு மிக தீவிரமான பணியை செய்து வருவதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.

இந்தநிலையில் பின்லாந்து பிரதமர் சன்னா மரீன்( Sanna Marin) அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்து போதையில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், டூவிட்டர் போன்றவற்றில் வைரலாக பரவி வருகிறது.

 

கடந்த 2020 ஆம் ஆண்டு பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த போது, அவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது, மேலும் உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என்ற கண்டன குரல்களும் தொடர்ந்து வெளிவந்தது.

இந்நிலையில் பிரதமர் சன்னா மரீன் போதையில் ஆட்டம் போட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளதை அடுத்து பிரதமர் பதவிக்கு சன்னா மரீன் அவமரியாதையும் களங்கத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பின்லாந்து ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed