Homeஅறிவியல்ஏலியன்கள் இருப்பது உண்மை.. அமெரிக்காவிடம் வேண்டுகோள் வைத்த ஏலியன்ஸ்

ஏலியன்கள் இருப்பது உண்மை.. அமெரிக்காவிடம் வேண்டுகோள் வைத்த ஏலியன்ஸ்

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மை எனவும், அமெரிக்காவும் வேற்றுக்கிரகவாசிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்பு துறை முன்னாள் தலைவர் ஹய்ம் இசேத் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேற்றுகிரக வாசிகள் உள்ளனரா? அல்லது அது எல்லாம் ஒரு மாயையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து பல ஆராய்ச்சிகளும் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது வேற்றுகிரக வாசிகளின் வாகனமான யூ.எப்.ஓ பார்ப்பதாகவும் பல்வேறு விடியோக்கள் வெளியாகின.

இந்நிலையில், இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்பு துறை முன்னாள் தலைவர் ஹய்ம் இசேத் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த பேட்டியின் போது, ” வேற்று கிரக வாசிகள் உண்மையில் உள்ளனர். இது குறித்த தகவல் அமெரிக்காவிற்கும் தெரியும். அதிபர் டிரம்புக்கும் தெரியும்.

தங்களை எதிர்கொள்ள பூமி வாசிகள் இன்னும் தயாராகவில்லை என்றும், தாங்கள் இருக்கும் இடத்தை ரகசியமாக வைத்திருக்குமாறும் அமெரிக்காவிடம் வேற்றுகிரகவாசிகள் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல வருடங்களாகவே வேற்றுக்கிரக வாசிகளுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.