Homeஅறிவியல்சூரியன் வெடிப்பதை முதன் முறையாக வீடியோவாக வெளியிட்ட விஞ்ஞானிகள்

சூரியன் வெடிப்பதை முதன் முறையாக வீடியோவாக வெளியிட்ட விஞ்ஞானிகள்

அண்ட வெளியில் மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் எரிந்து கொண்டு இருகிறது. அவைகளில் சில எரிந்து முடிந்து கருகிய அல்லது அணைந்து போன கிரகமாக மாறி பின்னர் ஒரு கட்டத்தில் வெடிக்கிறது.

இந்த வெடிப்பானது அண்ட வெளியில் நடக்கும் மிகப் பிரம்மாண்டமான வெடிப்பு ஆகும். ஒரு சூரியன் பல மில்லியன் ஆண்டுகள் வரை எரிய வல்லது. இதன் காரணத்தால் அணையும் சூரியனைப் பார்ப்பது என்பது மிகக் கடுமையான விடையம்.

ஆனால் பூமியில் இருந்து, மில்லியன் அல்ல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள ஒரு அணைந்து போன சூரியன் வெடித்துள்ளதை, விஞ்ஞானிகள் சம காலத்தில் வீடியோவாக எடுத்துள்ளார்கள்.