Mon, Dec5, 2022

#Trending

ஆடை மாற்றும்போது தாமரையின் காயினை எடுத்த சுருதி – பாவனி: கடுப்பில் சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், காயின் டாஸ்க் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. காயின் டாஸ்க்கை மையமாக கொண்டு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே சூடான பல விவகாரங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

குறிப்பாக தாமரை குளித்து முடித்துவிட்டு ஆடை மாற்றும் அறையில் ஆடை மாற்றும்போது அவருடைய காயினை, பாவனியின் உதவியுடன் சுருதி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பாகி ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தாமரைக்கு உதவுவதாக ஆடை மாற்றும் அறைக்கு சென்ற பாவனி, தாமரைக்கு டவலை வைத்து மறைக்க, தாமரையின் காயினை எடுத்துக்கொண்ட சுருதி, நேரே வந்து பிக்பாஸின் கமராவில் காட்டி ‘காற்று’ எனும் நாணயத்தை தான் எடுத்து விட்டதாகவும், இனி அந்த நாணயம் தனக்கு சொந்தம் என்றும் பதிவு செய்தார்.

ஆடை மாற்றும் அறையில் இருந்து ஆடை மாற்றிவிட்டு வெளிவந்த தாமரை சுருதியிடம், “இது தப்பு பாப்பா.. இது துரோகம்.. நம்பிக்கை துரோகம்.. உன்னை எவ்வளவு நம்பினேன்.. உன்னிடம் எப்படி எல்லாம் பழகினேன்.. நீ எனக்கு இந்த நிலைமையில் இப்படி செய்திருக்கிறாயே?” என்று அழுதும் புலம்ப, இதன்போது சேர்ந்த சிபி, ராஜூ, இமான் அண்ணாச்சி சுருதி மற்றும் பாவனியிடம் இது முறையல்ல என்று வாதிட்டனர்.

இதேவேளை சிபி, ராஜூ, இமான் அண்ணாச்சி, நிரூப், பிரியங்கா, சின்னபொண்ணு மற்றும் அக்‌ஷரா அவர்கள் அறையில் இருக்கும் போது இந்த பேச்சு தொடர, அப்போது அங்கு வந்த பாவனியும் சுருதியும், தாமரை உள்ளே நடந்ததை சரியாக புரிந்துகொள்ளும்படி கூறவில்லை என்று கூற, சுருதியோ, அப்படி உங்களை அசிங்கப்படுத்தி எடுக்க வேண்டியதில்லை. நாங்கள் உங்களை தொடக்கூட இல்லை என்று கேட்டனர்.

ஆனால் தாமரையோ, “நான் ஆடை மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் எடுத்தாலும் என்னால் எப்படி கத்த முடியும்? அந்த நிலைமையில் நான் இருந்தேன்ல?” என்று சொல்லி, “என்னை இப்படியான ஒரு நிலைமைக்கு ஆக்கிவிட்டீர்களே? என தாமரை பேசியுள்ளார்.

பின்னர் என்னை விட்டுவிடுங்கள் நான் போகிறேன்” என்று சொன்னதுடன், “நீ விளையாண்ட ஆட்டத்தை மக்கள் பார்க்கவே இல்லை. இப்படி விளையாட்டை ஆடாத தப்பு அவ்வளவுதான்.. நான் செம்ம கோவத்துல இருக்கேன்.. போய்டு பாப்பா!” என கூறிவிட்டார்.

இதேவேளை சுருதி பாவனியின் உதவியுடன் கழிவறைக்கு சென்று தாமரை குளித்துவிட்டு ஆடை மாற்றும் போது காயினை எடுத்ததாக கூறப்படுவது குறித்து பாவனியிடம் நிரூப் மற்றும் பிரியங்கா பேசும்போது, “நீ எதுக்கு தாமரை ஆடை மாற்றும்போது டவல் கொண்டு மறைத்தாய்? அதுவே மறைவாக உள்ள டிரெஸ்ஸிங் ரூம் தானே? அங்கு கமரா கூட இல்லையே?” என்று கேட்க, பாவனியோ, தான் இந்த நிலையில் தாமரைக்கு உதவி செய்ததுடன் தவறு.. அவரோ இப்படி பேசுகிறார்.

நான் சுருதிக்கு உதவ உள்ளே சென்றாலும், தாமரையின் நிலமை தெரியாது. எனவே அவருக்காக தான் டவலை பிடித்திருந்தேன். அந்த கேப்பில் சுருதி காயினை எடுத்துக் கொண்டார்.

நான் தாமரையின் நிலையில் இருந்திருந்தால், ‘அய்யோ இப்படி காயின் விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே’ என நினைத்து அதை காப்பாற்றத்தான் முயற்சித்திருப்பேன் என கூறிவிட்டு மற்றவர்கள் பதில் பேசும் முன் அங்கிருந்து சுருதி சென்றுவிட்டார்.

அதன் பின்னர் தாங்கள் தவறே செய்யவில்லை, ஆனால் தங்கள் பெயர் கெடுகிறது என்று சொல்லி, பாவனி மற்றும் சுருதி அழ, பிரியங்கா மற்றும் மதுமிதா சமாதானப்படுத்தியுள்ளனர்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities