‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன.
முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை பெற்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்று தொடங்கி உள்ளது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 5 போட்டியாளர்கள்
1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)
18. ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.