Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இசையின் பாட்டு.. பிரியங்காவின் சட்டை.. களைகட்டியது கமல் பிறந்தநாள்!

பிக் பாஸ் வீட்டில் இந்த ஆண்டும் கமல் சார் பிறந்தநாள் செம சூப்பராக களைகட்டியது. ஷோபாவுக்கு பின்னாடி ஒளிந்திருந்து ஹவுஸ்மேட்ஸ் வாழ்த்தியது, கேக் கட்டிங் மற்றும் அனைவரது பர்ஃபார்மன்ஸையும் பார்த்து நெகிழ்ந்து போனார் உலக நாயகன்.

ஐக்கி பெர்ரி, இசைவாணி, தாமரை செல்வி, இமான் அண்ணாச்சி, ராஜு ஜெயமோகன் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் ஸ்பெஷல் பர்ஃபார்மன்ஸ் செய்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

சகல கலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற ஹேப்பி நியூ இயர் பாடலை ஹேப்பி பர்த்டே பாடலாக மாற்றி பிக் பாஸ் போட்டியாளர்கள் கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், பர்த் டே கேக் கேட்க விருமாண்டி பாடல் ட்யூனில் பிச்சை எடுக்காத குறையாக பிரியங்கா அண்ட் கோ கமல் சாரிடம் கேட்க கேக் மற்றும் பிரியாணி ஹவுஸ்மேட்களுக்கு வழங்கப்பட்டன.

இந்திய சினிமாவின் பெருமைமிகு பொக்கிஷமாக திகழும் உலகநாயகன் கமல் சாரின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு பிக் பாஸ் போட்டியாளரான ஐக்கி பெர்ரி பாடிய ராப் இசை பாடல் கமலுக்கு மிகவும் பிடித்து போனது. பாடல் முழுவதும் அரசியல் நெடிகளும் அதிகமாகவே காணப்பட்டன.

இத்தனை நாள் இதை எல்லாம் எங்கேம்மா வச்சி இருந்த இசை என கேட்கும் அளவுக்கு கமலை பற்றிய அட்டகாசமான கானா பாடலை பாடி இசைவாணி ரசிகர்களின் பாராட்டுக்களை வெகுவாக கவர்ந்தார்.

ஐக்கியின் பாடலை விட இசையின் பாடலை கமல் சற்று கூடுதலாக ரசித்துக் கேட்டார். அதற்கு காரணம் நாம சொன்னதை புரிந்து கொண்டு இசை பாட ஆரம்பித்துள்ளாரே என்கிற பூரிப்பாக கூட இருக்கும்.

இமான் அண்ணாச்சி மற்றும் தாமரை செல்வியின் பாலசந்தர் கமலை நாயகனாக ஆக்கிய டிராமா ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப் பட்டது. இருவரும் சிறப்பாக நடித்து அசத்தினர். கடைசியாக தாமரைக்கு நம்பர் தரமாட்டார் என இமான் அண்ணாச்சி டபுள் மீனிங் கோலையும் போட்டார்.

கமல் சார் ஒரு படி மேலே சென்று அந்த கதையில் நண்பர் ரஜினிகாந்தையும் இணைத்துக் கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இமான் அண்ணாச்சி மற்றும் தாமரை போட்ட அந்த டிராமாவை ராஜு தான் எழுதினார் என்று சொன்னதும் ஏகப்பட்ட கைதட்டல்கள் ஒலித்தன.

அதனை தொடர்ந்து ராஜு பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய பயம் என தெனாலி பட வசனம் போல பிக் பாஸ் வீட்டில் தனக்கு பிடிக்காதவர்களை தாக்கிப் பேசியது போல கலாய்த்து பேசியதை மிகவும் ரசித்தார் கமல்.

கடைசியாக கமலுக்கு அதிரடியாக பிறந்தநாள் கவிதை வாசிக்கிறேன் என்கிற பெயரில் இந்த வாரம் எவிக்‌ஷன் வேண்டாம் என ஐஸ் வைத்தார். ஆனால், அது முடியாது என சுருதியை வெளியேற்றி விட்டார் கமல்.

பிரியங்காவும் கமல் சாரை போலவே கருப்பு சட்டை, வேட்டி அணிந்து கொண்டு செம மாஸாக அமர்ந்து இருந்தார். மேலும், அவரது சட்டையில் கமல் சார் படமும், உங்கள் நான் வாசகமும் இடம் பெற்று இருந்ததை காட்ட கமலே கொஞ்சம் கடுப்பாகி விட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.