ரித்திகா சிங் கிளாமராக எடுத்த போட்டோஷுட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அடிப்படையில் பாக்சரான ரித்திகா சிங் சுதா கொங்கராவின் இறுதிச்சுற்று படத்தில் மாதவனுடன் நடித்தார். பாக்சராக அதில் அவர் ஏற்று நடித்த வேடம் பாராட்டப்பட்டது.
ரித்திகா சிங் பாக்சர் என்பதால், வழக்கமான ஹீரோயின் வேடத்தில் அவரை நடிக்க வைக்க தமிழ்த் திரையுலகம் தயங்கியது.
காக்கா முட்டை மணிகண்டன் தனது ஆண்டவன் கட்டளை படத்தில் பத்திரிகையாளராக சிறப்பான ஒரு வேடம் தந்தார். அந்தப் படம் ரித்திகா சிங்கிற்கு பெயர் வாங்கித் தந்தது.
லாரன்சின் சிவலிங்கா படத்தில் ரித்திகா கவர்ச்சி காட்டி நடித்தார். ஆனால் அது எடுபடவில்லை. படமும் பிளாப்பானது.
அதேநேரம் அசோக் செல்வனுடன் நடித்த ஓ மை கடவுளே படம் ஓடியது. பெயரையும் சம்பாதித்து தந்தது. எனினும் புதிதாக படங்கள் அமைவது ரித்திகாவுக்கு சவாலாகவே இருந்தது.
தற்போது அவர் நடிப்பில் பாக்சர் படம் தயாராகிறது. இது அருண் விஜய் நடிக்கும் படம். ரித்திகாவும் பாக்சர் என்பதால் இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரித்திகாவுக்கு கிடைத்திருக்கும் மற்றொரு படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படம் தவிர அவர் கைவசம் வேறு படங்களில்லை.
கிளாமர் காட்டினால் மட்டுமே வழக்கமான ஹீரோயின் வேடத்துக்கு வாய்ப்பு வரும் என்பதால், கிளாமராக ஒரு போட்டோஷுட் நடத்தி அந்தப் படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் ரித்திகா.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.