பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 23 ம் நாளான இன்று, ஆரம்பமே காரசார விவாதம், அழுகை என துவங்கியது. காலையிலேயே உடை மாற்றும் அறையில், தாமரை உடைமாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அவர் வைத்திருந்த காற்று நாணயத்தை, பாவனியின் உதவியுடன் சுருதி எடுத்தார்.
இதை பார்த்து விட்ட தாமரை, சுருதியிடம் வந்து கேட்கிறார். முதலில் தாமரையிடம் தனக்கு தெரியாது என கூறும் பாவனி, ராஜு வந்து கேட்கும் போது, இவர்களுக்கு எதற்காக நான் விளக்கம் சொல்ல வேண்டும் என இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.
உடை மாற்றும் அறையில், ஒருவர் உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது இப்படி காயினை எடுப்பது தவறு என வீட்டில் உள்ள அனைவரும் தாமரைக்கு ஆதரவாக பேசுகிறார்கள். தாமரை கோபமாக பேசி, கண்ணீர் விட்டும் அழுகிறார்.
அதே சமயம் தாங்கள் செய்தது தவறு இல்லை என்றும், தங்களை தவறாக காட்ட தாமரை முயற்சிப்பதாகவும், காயினை கொடுக்க முடியாது என்றும் சுருதியும், பாவனியும் அழுகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் அறிவிப்பை அனுப்பி உள்ளார் பிக்பாஸ். அதில் ஹவுஸ்மெட்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும். ஒரு அணி நகரத்தாரை போலவும், மற்றொரு அணியினர் கிராமத்தினர் உடையணிந்து கலந்து கொள்ள வேண்டும்.
நகரத்தார் டீமுக்கு நிரூப்பும், கிராமத்தினர் டீமுக்கு அக்ஷராவும் தலைவர்களாக நியமிக்கப்படுகிறார். இது நெருப்பிற்கான வாரம் என்பதால் நெருப்பு காயினை வைத்துள்ள இசைவாணி நடுவராக இருக்க வேண்டும்.
இரு அணியிடமும் பிக்பாஸ் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அந்த தொகையை அன்றாட செலவுகளுக்கு இரு அணியினரும் பயன்படுத்த வேண்டும். போட்டியின் முடிவில் எந்த டீம் அதிக தொகையை மிச்சம் செய்து வைத்திருக்கிறதோ அந்த டீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி போட்டியாளர்கள் கிராமத்து மற்றும் நகரத்தார் கெட்அப்பிற்கு மாறி, லக்சுரி பட்ஜெட் டாஸ்கிற்காக தயாராகிறார்கள். கிராமத்து மனிதரை போல் மாறுவதற்காக ராஜு, தாடியை எடுக்கிறார். அப்போது பிரியங்கா, இது இரண்டு நாட்களுக்கு பிறகு மாறும் என்றார். அதற்கு ராஜு, இதை முதலிலேயே சொல்லக் கூடாதா. நான் தாடியை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
நகரத்தார் கெப்அப்பிற்கு மாறி வரும் இமான் அண்ணாச்சியும், பாவனியும் தாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை போல் பேசிக் கொள்கிறார்கள். இரு அணியினரும் தங்கள் டீமிற்று ஏற்றது போல் பாடல் பாடி குழுவாக ஆடிப்பாடி கொண்டிருக்கிறார்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.