Fri, May7, 2021

திருப்பதியில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்; மகிழ்ச்சியில் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமின்றி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆர்கானிக் முறையில் நெய்வேத்யங்களை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த முறையானது சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சூழலில் கடந்த ஒன்றாம் தேதி திருமலையில் ஆர்கானிக் நெய்வேத்யம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், வெல்லம், நெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை கொண்டு ஸ்ரீவாரி நெய்வேத்யம் தயாரிக்கப்படும்.

இந்த முறை 100 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் செயல்பாட்டில் இருந்த வழக்கம் தான். ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.

இதனை தேவஸ்தான நிர்வாகம் மறுபரிசீலனை செய்தது. அதன்படி ஆர்கானிக் உணவுப் பொருட்களை கொண்டு நெய்வேத்யம் தயாரிக்கும் முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

முன்னதாக சோதனை முறையில் திருமலை கோயிலில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் சுவை மற்றும் தரம் மிகவும் சிறப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு ஆர்கானிக் முறையில் விளைந்த பொருட்களை கொண்டு திருமலை கோயிலில் அனைத்து உணவுகளும் தயாரிக்கப்படும். இந்த முறை இனி வருங்காலங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து பேசிய தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, ஆர்கானிக் முறையில் விளைந்த பெங்கால் கிராம், வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டது.

இதனை சாப்பிட்டு பார்த்த பலரும் முன்பை விட மிகவும் சுவையாக இருப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் தரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். எனவே இம்முறையை தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்துள்ளோம். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

அவர்களிடம் இருந்து இயற்கையான முறையில் விளைந்த/ கிடைக்கும் பொருட்களை தொடர்ந்து வாங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்