Homeஇந்தியாபெண்களுடன் உல்லாசம்... அரைகுறை ஆடைகளுடன் அரசியல்வாதியை தட்டி தூக்கிய போலீஸ்.!

பெண்களுடன் உல்லாசம்… அரைகுறை ஆடைகளுடன் அரசியல்வாதியை தட்டி தூக்கிய போலீஸ்.!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்தி, இவர் உத்திரமேரூர் நகர அமமுக செயலாளராக உள்ளார்.

உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன். இவர்கள் இருவரும் நேற்று நுண் தினம் உத்திரமேரூர் நகரில் உள்ள ஒரு லாட்ஜில் தனித்தனியாக அறைகள் எடுத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் லாட்ஜில் சோதனை நடத்தியபோது ஒரு பெண்ணுடன் கார்த்தி ஜாலியாக இருந்தது தெரிய வந்தது, அவரது பக்கத்து அறையில் வீரராகவன் ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருப்பது தெரியவந்தது.

இருவரும் காவல்துறையினர் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன் இருந்த இரண்டு பெண்களை போலீசார் மீட்டனர், பின்னர் அவர்களை காஞ்சிபுரத்தில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர்.