Homeஇந்தியாஇந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ்.. அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ்.. அச்சத்தில் மக்கள்!

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வரும் நிலையில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் உருமாறி அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச்சில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிய நிலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 15 நாட்களாக தொற்று விகிதம், 5% கீழே குறைந்துள்ளது.

இரண்டாவது அலையின் போது உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் மிக வேகமாக பரவியது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்தது. இந்த வைரஸ் டெல்டா பிளஸ் உருமாற்றம் அடைந்து மூன்றாவது அலையை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சமீபத்தில் எச்சரித்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, மற்றும் கர்நாடகாவில் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 30 பேர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிராவில் 21 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், கேரளாவில் 3 பேரும், கர்நாடகாவில் இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ் கண்டறியப்பட்டுள்ளது.