சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அதிலும் இவர் தேர்ந்தெடுக்கும் காமெடி கதைகள் பெரும்பாலும் ஹிட் தான்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இந்த படத்தில் சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்த சிவகார்த்திகேயன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து இருந்தார்.
அப்போது அவருடைய நடிப்பில் வெற்றியடைந்த படங்களின் இரண்டாவது பாகம் குறித்து சிலர் கேள்வி கேட்டார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி நாங்கள் சும்மா தான் பேசினோம்.
ஆனால், அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களை அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதை திரும்ப எடுக்க முடியாது.
அதே போல் ரெமோ படத்தையும் எடுக்க முடியாது. ஆனால், அந்த நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமென்றால் ஒரு படம் எடுக்கலாம் என்று சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அப்படி என்றால் சிவகார்த்திகேயன் மீண்டும் நர்ஸ் கெட்டப் போடுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கணும்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.