இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமை. கடைசி சனிக்கிழமையான நாளை விரதம் இருந்து பெருமாளுக்கு வழிபடுவது சிறந்தாகும்.அந்தவகையில் தற்போது பெருமாளை எப்படி வழிப்படலாம் என்பதை பார்ப்போம்.
பெருமாளை வழிபடும் முறை
பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.
சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும்.
கடைசி சனிக்கிழமையன்றும் இந்த விரதம் இருந்து பெருமாளை மனமுருகி வணங்கினால் அதன் பலன் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம் என்கின்றனர் முன்னோர்கள்.