Malayagam
Home » இரண்டு வேறு வேறு தந்தைகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

இரண்டு வேறு வேறு தந்தைகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

பிரேசிலின் மினெரியோஸ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

எனினும் இக் குழந்தைகளின் தந்தை இரண்டு பேர் என்பது வைத்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அப் பெண் ஒரே நாளில் இரண்டு நபர்களுடன் உறவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அதில் தந்தை யார் என்பதில் அந்த பெண்ணுக்கும் சந்தேகம் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தன்னுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஒரே ஒரு தந்தை வழி சோதனையை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்படி அவர் DNA பரிசோதனை எடுத்து பார்த்ததில் சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் தந்தை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. அந்தப் பெண் இதனை அறிந்து திகைத்துப் போகவே, இன்னொரு நபர், மற்றொரு குழந்தையின் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் ஆச்சரியப்பட கூடிய விஷயம் என்னவென்றால், இரு ஆண்கள் மூலம் அந்த பெண் கருவுற்றிருந்தாலும் இரண்டு குழந்தைகளின் உருவ ஒற்றுமையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது தான் மருத்துவர்களையும் திக்கு முக்காட வைத்துள்ளது.

இது பற்றி பேசும் மருத்துவர்கள், இந்நிகழ்வு மிகவும் அரிதானதாக இருந்தாலும் முற்றிலும் சாத்தியம் இல்லை என்றும் கிடையாது என தெரிவித்துள்ளனர். அறிவியல் ரீதியாக இந்த முறை Heteroparental Superfecundation என அழைக்கப்படுகிறது. ஒரே தாயிடம் இருந்து இரண்டு முட்டைகள் வெவ்வேறு ஆண்களால் கருத்தரிக்கப்படும்போது இந்த நிகழ்வு சாத்தியமாகின்றது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மில்லியனில் ஒருவருக்கு தான் இது போன்று நடக்கும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த Heteroparental Superfecundation தன்மை கொண்ட குழந்தைகள், மொத்தம் உலக அளவில் 20 பேர் வரை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed