திருமணமான பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் நிர்வாணமாக வெளிட்ட மற்றொரு பெண்ணும், அவரது காதலனும் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரளா மாநிலம் திருவணந்தபுரத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவரின் புகைப்படம் நிர்வாணமாக மார்பிங் செய்யப்பட்டு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பரப்பப்பட்டு உள்ளது.
வெளியிடப்பட்டத்தைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்குள்ள சைபர் க்ரைம் போலீஸில் புகார் உடனடியாக புகார் அளித்தனர்.
போலீசார் மேற்கொண்ட இந்த விசாரணையில், ஆபாசப்படம் வாட்ஸ்ஆப் வந்த எண்ணை வைத்து தீவிரமாக விசாரணையைத் தொடங்கினர்.
அந்த விசாரணையில், குறிப்பிட்ட அந்த வாட்ஸ்ஆப் எண்ணானது, அங்குள்ள மிபின் ஜோசப் என்ற இளைஞனுடையது என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், “எனக்கு நெருக்கமான செளமியா என்ற இளம் பெண் கூறியதன் படியே, நான் சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாச சித்தரித்து இணையத்தில் பரப்பியதாக” வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
மேலும், இந்த வழக்கில் மிபின் ஜோசப் மற்றும் செளமியா ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து அவர்கள் இருவரிடமும் ஒன்றாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக பேசிய போலீஸார், “செளமியாவின் முன்னாள் காதலர் தான் அந்த இளம் பெண்ணின் கணவர் என்றும், செளமியாவிடம் பணம் பெற்று அவர் திரும்பத் தரவில்லை என்ற காரணத்தால், இப்படி செய்ததாகவும்” தெரிய வந்தது.
குறிப்பாக, இதனால், “அந்த நபரை பழிவாங்க வேண்டும் என்றும், அவர்களது திருமண பந்தத்தை முறிக்க வேண்டும் என்ற நோக்கிற்காகவும், ஃபேஸ்புக்கில் அவர்கள் பதிவிட்டிருந்த திருமணப் போட்டோக்களில் இருந்து போட்டோவை எடுத்து அதனை விவின் ஜோசப் உதவியுடன் மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததும்” விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.