HomeசினிமாCinema Newsஉசுர கொடுத்து வேலை செஞ்சோம்., ஆனா ஒன்னும் கிடைக்கல.!

உசுர கொடுத்து வேலை செஞ்சோம்., ஆனா ஒன்னும் கிடைக்கல.!

தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் விரும்பப்பட்ட கிளாசிக்களில் ஒன்று “ஆயிரத்தில் ஒருவன்” என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் பார்த்திபன், கார்த்தி, ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசைமைத்துள்ளார்.

சோழ சாம்ராஜ்யத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. சமீபகாலமாக இப்படத்தைப் பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சசலசலப்பு இன்று வரை இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பார்த்திபன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இந்த இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் எப்போடா வரும்னு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்திற்கு பிரமாண்ட இசையமைத்த ஜிவி பிரகாஷுக்கு இப்பவரை எந்த ஒரு அவார்ட் நிகழ்விலும் ஒரு பாராட்டும் விருது கூட கிடைத்ததில்லை என்றும் ஆடுகளம் படத்திற்கு மட்டும் சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

- Advertisement -

ஆனால், நான் நல்லா வேலை செய்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் தான், இதுவரை எனக்கு அந்த படத்தில் ஒர்க் செய்ததற்கு ஒரு பலனும் கிடைத்ததில்லை என்று இதனை ஒரு பேட்டி ஒன்றில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார் ஜிவி பிரகாஷ்.

இதற்கிடையில், ஜி வி பிரகாஷ் ஒரு நடிகர் என்பதைவிட ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பது தான் உண்மையான ஒன்றாக இருக்கிறது. அதிலும் இவர் இசையமைத்த ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், அசுரன் போன்ற பல படங்களில் இவரின் இசை ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

ஆனால், இதுவரை இவரது இசைக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular