`தன் மகன் மூன்று வயதிலேயே போதை பொருளை பயன்படுத்தலாம் என்று ஷாருக்கான் கூடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் ஷாருக்கான் மகனின் போதைப் பொருள் வழக்கு குறித்த விவகாரம் தான் அதிகமாக வருகிறது. சொகுசு கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி செய்தால் ஷாருக்கானின் மகன் ஆர்யான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் இது குறித்து ஷாரூக்கானிடம் பேசுவதற்காக சல்மான்கான் நள்ளிரவில் சென்றதாக கூறப்பட்டு வருகிறது.
ஷாருக்கான் ஸ்பெயின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பி இருப்பதாகவும் அப்போது தான் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மறைமுகமாக பல பிரபலங்கள் ஷாருக்கானுக்கு உதவி செய்து வரும் நிலையில் சிலர் பெயில் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
I am not sure #ShahRukhKhan said it humorously or seriously but it's a reality now. pic.twitter.com/X7p7BqltLU
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) October 4, 2021
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னால் தன் மகன் குறித்து ஷாருக்கான் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது ஷாருக்கான் சொன்ன விஷயம் இன்று நிஜத்தில் நடந்துவிட்டது என்று கூறி வருகின்றனர்.
1997 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் நடிகை சிமி கரோவலுடன், ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கானும் கலந்துகொண்டார்கள். தனது மகனை எப்படி வளர்ப்பது என்று ஷாரூக்கானிடம் கேட்டதற்கு அவர் கூறியது, என் மகன் 3 வயதிலேயே பெண்களை பின்தொடரலாம், பெண் பித்தனாக இருக்கலாம், விரும்பும் அளவுக்கு புகைக்கலாம், போதைப்பொருள் பயன்படுத்தலாம், உடலுறவு கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.