HomeசினிமாCinema Newsஓடிடியில் வெளியாகும் டான்

ஓடிடியில் வெளியாகும் டான்

இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சிபி சக்ரவர்த்தி. இவர் இயக்கத்தில் உருவான டான் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

இதில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். படத்திற்கு மிகவும் பாசிட்டிவான கருத்துகளே வந்தன.

- Advertisement -

டாக்டர் வெற்றிக்கு பிறகு ரிலீஸான சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், ‘டான்’ படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது.

இதையடுத்து டான் திரைப்படம் வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து உள்ளது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular