Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கட்டு கட்டாய் பணம் தங்க வேண்டுமா? மூன்று வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கட்டாயம் பணத் தேவை இருக்கின்றது. ஆனால் பலருக்கும் உள்ள முதல் பிரச்சனை என்னவென்றால் அது பண பிரச்சனை தான். ஏனெனில் நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.

பண பிரச்சினை தீர்ந்த பணம் கையில் தங்க சில பரிகாரங்கள் உள்ளது. தற்போது அதில் மிகவும் எளிய பரிகாரம் ஒன்றை இங்கே பார்ப்போம்.

1/2 டம்ளர் அளவு இளநீரில், 2 கற்பூரவள்ளி இலைகளை நன்றாக நசுக்கி போட்டுக் கொள்ள வேண்டும். அதனுடைய சாறு ஐந்து நிமிடம் போல அந்த இளநீரில் இறங்கட்டும்.

அதன் பின்பு இந்த தண்ணீரை கொண்டு உங்களுடைய கையை கழுவிக்கொள்ள வேண்டும். நன்றாக தேய்த்து உள்ளம் கைக்கு முன் பக்கம், பின் பக்கம் இந்த தண்ணீர் படும்படி கழுவி அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் இருங்கள். நல்ல தண்ணீரில் கையை கழுவ வேண்டாம்.

பத்து நிமிடங்கள் கழித்து உங்களுடைய கையை சுத்தமான நல்ல தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். தவறு கிடையாது. மாலை ஆறு மணிக்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும். பிறகு தொடர்ந்து இந்த தண்ணீரில் கையை கழுவி வர மேலும் மேலும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிக் கொண்டு வரத்தான் செய்யும். முடியாதவர்கள் மூன்று வாரத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

மீண்டும் ஒரு மாதம் கழித்தோ அல்லது தேவைப்படும் போது இந்த பரிகாரத்தை நீங்கள் மீண்டும் செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கைக்கு வந்த பணம் வீண்விரயம் ஆகாமல் சேமிப்பில் தங்கும். நீங்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அது துலங்கும்.