Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கண்ணா லட்டு திங்க ஆசையா பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க…

கண்ணா லட்டு திங்க ஆசையா படம் தமிழில் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சந்தானம் கூட்டணியில் பட்டையைக் கிளப்பிய இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர்தான் சேதுராமன்.

டாக்டரான சேதுராமன் இளவயதில் திடீர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், சந்தானம், ஹீரோ சேதுராமன் ஆகிய மூவரும் ஒரே பெண்ணை காதலிப்பார்கள். இந்தப்படம் இதனாலேயே கல, கலப்பாகப் போகும்.

இந்தப் படத்தில் விஷாகா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு புடிச்சுருக்கு என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இருந்தும் 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு திங்க ஆசையா படம் தான் அவருக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

இவர் தொடர்ந்து இந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது தமிழில் அரண்மனை 3 படத்திலும் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்பு நடிகை விஷாகா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.