Homeஜோதிடம்ராசி பலன்குருவால் திடீர் லாபம்! யாருக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டும்

குருவால் திடீர் லாபம்! யாருக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டும்

குரு பார்வை கோடி நன்மையைத் தரும். குருவின் பார்வை சில ராசிகளின் மீது விழுகிறது. இதனால் சில ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழைதான்.

எந்த ராசிக்காரர்கள் குரு பார்வையால் நன்மைகளை அடைந்து நன்றி சொல்லப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

- Advertisement -

குருவின் பார்வை கிடைத்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்தான். குரு பகவான் மீன ராசியில் வக்ரமாக பயணம் செய்தாலும் சில ராசிக்காரர்களுக்கு பார்வையால் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.

கடகம்

குரு பார்வையால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து பெருகும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். தடைபட்டு வந்த தள்ளிப் போன திருமணம், குழந்தை பாக்கியம், புது வீடு குடியேறுதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைகள் நீங்கி கை கூடி வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

- Advertisement -

உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கடன் பிரச்னையால் கௌரவத்துக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் எழும். வீண் சந்தேகத்தால் நல்ல உறவுகள், நட்புக்களை இழக்க நேரிடும்.

கன்னி

பண வரவு அதிகரிக்கும். பணப்பிரச்சினையால் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேருவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தை திருப்பித் தருவார்கள். 120 நாட்கள் குரு வக்ரத்தில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். உறவினர்கள், சகோதரர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்

குரு பகவானின் ஒன்பதாம் பார்வை விருச்சிகம் ராசியின் மீது விழுகிறது. ஏழரை சனி, ஜென்ம கேது என பல காலமாகவே கஷ்டங்களை மட்டுமே அனுபவித்த உங்களுக்கு இப்போதுதான் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்து வருகிறது.

நன்றாக தூங்கி பல வருஷம் ஆகிவிட்டது என்று கவலைப்பட்ட நீங்கள் இனி நிம்மதியாக உறங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.

RELATED ARTICLES

Most Popular