குளியலறையில் நாம் செய்யும் சில தவறுகள் உடல்நலத்தில் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த தவறுகள் என்ன என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
குளியலறையில் நீங்க செய்யும் 5 பெரிய தவறுகள்!
ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரே டூத் பிரஷை பயன்படுத்துவது. இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும்.
ஷேவிங் ரேசரை கழிவரையிலேயே வைப்பது. தண்ணீர் அதன் மீது அதிகம் படும் வாய்ப்பு இருப்பதால் ரேசர் எளிதாக துருப்பிடித்து போகும்., பாக்டீரியா தாக்கம் உண்டாகும்.
ஒரே துண்டில் அனைவரும் கை துடைக்கும் பழக்கம் கொண்டிருப்பதும் தவறு. அனைவரும் தனிதனி துண்டுகளை பயன்படுத்த வேண்டும்.
சோப்பை ஈரமான இடத்தில் வைப்பது, இதனால் எளிதாக சோப்பில் பாக்டீரியா அதிகரிக்கும்.
உடல் துடைக்கும் டவலை ஈரத்துடன் குளியல் அறையிலேயே விட்டுவிடுவது. இதை மீண்டும் மறுநாள் பயன்படுத்தினால் சருமத்தில் பாக்டீரியாக்கள் தான் ஒட்டும்.