Malayagam
Home » கூரையை பிரித்து பெண் பொலிஸார் குளிப்பதை பார்த்தவர் கைது

கூரையை பிரித்து பெண் பொலிஸார் குளிப்பதை பார்த்தவர் கைது

கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து சேவையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருக்கும் வீட்டின் குளியல் அறையின் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தக​ரத்தை கழற்றிவிட்டு, பெண் பொலிஸார் சிலர் குளித்துக்கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுபவர் என்றும் கைது செய்யப்படும் போது, அவர் மதுபோதையில் இருந்துள்ளார் என்றும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

பெண் பொலிஸ் தங்கிருக்கும் வீட்டின் மதில்மேல் ஏறி குதித்து, குளியல் அறையின் கூரையின் மீதேறி, தகரத்தை கழற்றிவிட்டே இவ்வாறு பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

தாங்கள் குளித்துக்கொண்டிருப்பதை யாரோ, கூரையில் இருந்து பார்ப்பதை அவதானித்த பெண் பொலிஸார் இதுதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அவரை கைது செய்வதற்கு முயன்றபோது, கூரையிலிருந்து குதித்து அவர் தப்பியோடியுள்ளார்.

எனினும், பின்தொடர்ந்து விரட்டிய பொலிஸார், டொரின்டன் மாவத்தையில் வைத்து அவரை கைது செய்து கறுவாத்தோட்ட பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed