ஜெசிகா என்ற இயற்பெயர் கொண்ட தீபா, மிஷ்கினின் துப்பறிவாளன் உட்பட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
29 வயதான அவர் யாரோ ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிகிறது, மேலும் அவளால் சமாளிக்க முடியாத பிரச்சினைகள் காரணமாக அவர் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது .
29 வயதாகும் தீபா, மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்த நிலையில் ‘வாய்தா’ என்ற படத்தில்தான் நாயகியாக நடித்தார்.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மேலும் ஒருசில படங்களில் அவர் கமிட் ஆகயிருந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில்,இணையத்தில் ஆக்டிவாக இருந்த தீபா, மனசுல நிறைய கவலை இருக்கு, அதை கேட்கத் தான் யாருமே இல்லை என்று இன்ஸ்டாகிராம் வீடியோவில் புலம்பி உள்ளார். கடந்த சில மாதங்களாகவே தீபா மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்பது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
இதுபோன்ற பல அழுத்தமோ, தற்கொலை எண்ணமோ வந்தால், அதிலிருந்து விடுபட நெருங்கிய நண்பர்களிடமோ, ஆலோசனை மையத்திலோ மனம்விட்டு பேசி இருக்கலாமே என்று இணையவாசிகளும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.