Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சமந்தா விவகாரம்: அவர் ஓரினச்சேர்க்கையாளர்… போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி.!

நாக சைதன்யா பிரபல நடிகை சமந்தாவை காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் ரசிக்கும் ஜோடியாக இருந்த இவர்கள் விவாகரத்து குறித்து பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.

அந்த வதந்திகளை உண்மையாக்கும் விதமாக யாரும் எதிர்பாராத நேரத்தில் நாக சைதன்யா தனது விவாகரத்தை அறிவித்திருந்தார். நடிகை சமந்தாவும் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டு விட்டு மௌனமாகி விட்டார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் இந்த விஷயம் தான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது இவர்களது விவாகரத்து குறித்து சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி பேசியுள்ளார்.

அதாவது இவர்களது விவாகரத்துக்கு சமந்தாவின் நெருங்கிய நண்பரான டிசைனர் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அந்த டிசைனர் ப்ரீத்தம் ஜூகல்கார் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்றும், சமந்தா அவருக்கு தங்கையை போன்றவர் என்றும், சமந்தாவின் விவாகரத்துக்கு டிசைனர் நிச்சயம் காரணம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.