in ,

சரியான நேரத்திற்கு மணமகன் வராததால் மாப்பிளையை மாற்றிய மாமனார்

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், தனது பெண்ணை தந்தை ஒருவர் வேறு ஒரு உறவுக்காரருக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள் கடந்த 22ம் திகதி மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை மணமகள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வருகைக்காக காத்திருந்தனர்.

எனினும் இரவு 8 மணி வரை மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதோடு , மணமகன் அவரது நண்பர்களுடன் மதுபோதையில் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து , இரவு 8 மணிக்கு மண்டபத்திற்கு மதுபோதையில் வந்த மணமகனும் அவரது நண்பர்களும் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மணப்பெண்ணின் தந்தையார் எங்கள் மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம் என கூறியுள்ளார்.

திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் வெகு நேரமாக மணமகன் வராததால், உறவினருடன் பேசி திருமணத்திற்கு வந்திருந்த வேறு ஒருவரை தனது மகளுக்கு திருமணம் தந்தை திருமண செய்துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Actress Reshma Pasupuleti Hot Latest

இலங்கையில் 60 வகையான மருந்துப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது