சளி ஒருவருக்கு பிடித்துவிட்டால், அது பாடாய்படுத்திவிடும். ஆனால் நம்மில் பலர் சளி பிடித்தால், அதை சாதாரணமாக நினைத்து, தற்காலிகமாக ஏதேனும் மாத்திரையை எடுத்துக் கொண்டு விட்டுவிடுவோம்.
இருப்பினும் இது எளிதில் தீராது. இதற்கு ஒரு சூப்பரான டீ ஒன்று உள்ளது. அது எளிதில் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி சளியை போக்குகின்றது.
தேவையான பொருட்கள்
துளசி – 4 தளிர்
புதினா – 4 தளிர்
தண்ணீர் – 200 மில்லி
தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி – தேவையான அளவு
செய்முறை :
முதலில் துளசி, புதினா இரண்டையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
நன்கு சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி கலந்து பருகலாம்.
குறிப்பு
துளசி மற்றும் புதினாவை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவையான போது ஒரு டம்ளருக்கு 1/2 டீஸ்பூன் வீதம் போட்டு பருகலாம்.