Mon, Dec5, 2022

#Trending

சினேகாவின் உண்மையான முகமே இதுதான்.. உண்மையை உடைத்த பயில்வான்..

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா.

2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார். தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார்.

நடிகை சினேகா பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது. இதெல்லாம் பொய் என்று சினேகா கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டும் பிரசன்னா டிவிட் செய்தும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

சினேகா

இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் உண்மையை பகிர்ந்துள்ளார்.

மேலும் பிரசன்னா மூன்றாம் ஆண்டு டாக்டர் பட்டப்படிப்பு பயிலும் போது அதை நிறுத்திவிட்டு நடிப்பு மீது ஆர்வம் கொண்டு அதை உதறிவிட்டு நடிக்க ஆரம்பித்தார்.

சினேகாவுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என்றும் இரவு பார்ட்டிக்கு சென்ற போது தான் இயல்பான வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்து புன்னகை அரசியாகினார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு சென்ற போது காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

எந்த சூழலிலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் யாரோ உள்நோக்கத்துடன் இதனை பரப்பி வருகிறார்கள் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities