மதுரை ஜெய்ஹிந்த்புரதை சேர்ந்தவர் பசீர் அகமது(65). இவர் கடந்த ஏப்ரல் மாதம் இதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த சிறுமிக்கு தாய் இல்லை என்பதால் தந்தையின் உறவினரான ஜமூனாதேவி என்பவரது பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி தனக்கு நேர்ந்ததை ஜமுனா தேவியிடம் கூறி உள்ளார். இதனையடுத்து ஜமுனா, மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிசார் குற்றவாளியை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, பசீர் அகமது கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதில் ரூபாய் ஐம்பதாயிரம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.