விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் முன்னிலையில் உள்ளது.
இந்த சீரியலில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.
ஆனால் பழைய கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ரோஷினியை இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு ரோஷினியின் பங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள சீரியலின் புதிய ப்ரோமோ வினுஷாவை புதிய கண்ணம்மாவாக அறிமுகப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை எபிசோடில் அவரது அறிமுகம் இருந்தது.
இந்தநிலையில் இதுவரை கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க? சில காரணங்களால் என்னால் “பாரதி கண்ணம்மா” சீரியலில் தொடர முடியவில்லை” என்று வீடியோ தொடங்கும் போது ரோஷினி கூறியதுடன், சீரியலில் இருந்து விடுபடும் முடிவை எடுத்ததற்காக தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
“நான் எடுத்த முடிவு உங்களை புண்படுத்தியிருந்தால், உங்கள் அனைவரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் இந்த உயரத்தை எட்டியிருக்க முடியாது. எதிர்காலத்திலும் நீங்கள் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி” என்று ரோஷினி கூறினார். இந்த வீடியோவுடன் “அன்பிற்கு நன்றி” எனவும் ரோஷினி பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.