பிக்பாஸ் வீட்டில் திங்கட்கிழமை பாத்ரூம் கிளினிங், சமையல், பாத்திரம் கழுவது, ஹவுஸ்கீப்பிங் என 4 கேப்டன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிக் பாஸ் இல்லத்தில் 2வது நாள் எபிசோடு கலகலப்பாக ஆரம்பித்து முடிந்தது.
பிக்பாஸ் வீட்டில் அல்டிமேட்டே பிரியங்காத்தான் அவர் தான் அனைவர் இடத்திலும் சிரிக்க சிரிக்க பேசுகிறார். ஹாய்… எல்லாரும் சீரியலில் பேசுவது போல பேசலாமா என்று கேட்டு கலகலனு பேசுகிறார். அவரை மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
இதையடுத்து, குக்கிங் டீமில் இருக்கும் பிரியங்கா எனக்கு இந்த டீமில் இருக்கவே பிடிக்கல என்கிறார். ஏன்னா, நானே சமைத்து…நானே சாப்பிடுவது சுத்தமா பிடிக்கல என்று புலம்புகிறார். எங்க அம்மா அடிக்கடி இதைத்தான் சொல்லுவாங்க அப்போ எனக்கு தெரியல சமைக்கும் போதுதான் தெரிது என்கிறார்.
இதையடுத்து, டைனிங் டேபிளில் இருக்கும் கேமராவை பார்த்து ஐக்கி, இமான் அண்ணா இந்த கேமராவை பார்த்து பிக் பாஸ் கண்ணைப்போல இப்படி கைவைத்து Wow whatsapp Man என்று சொல்ல சொல்கிறார்.
இதற்கு இமான் என்னதுமா ஒன்னும்புரியல என்று சொல்கிறார். கடைசியில் ஒரு வழியாக அந்த வார்த்தையை இமான் சொல்லிவிட ஐக்கி கைதட்டி சிரிக்கிறார். இதைபார்த்த இமாம் அண்ணாச்சி பாத்தியா நான் சொன்னேலே சூனியக்கார கிழவி என்று பாடகியை ஐக்கியை பங்கமாக கலாய்கிறார்.
இதில் இந்தவார லக்சரி பட்ஜெட் டாஸ்கில் இந்த வீட்டில் இருப்பவர்களின் கதை என்ன என்பதை ஹவுஸ்மெட்டுகளுக்கும், மக்களுக்கும் நீங்கள் யார் என்று புரியவைக்க வேண்டும் என்ற டாஸ் கொடுக்கப்பட்டது.
இதில் இசைவாணி தன் வாழ்க்கையில் சந்தித்த கடுதையான பாதைகளை கூறினார். இதையடுத்து பேசிய சின்னப்பொண்ணு நாட்டுப்புற பாடல்தான் என்னை வாழவைத்தது என்று கூறினார்.
பிக்பாஸ் வீட்டி 2ம் நாள் ஆட்டம் பாட்டம், நகைச்சுவை, அழுகை என்று ஒருவிதத்தில் அமைதியாகத்தான் முடிந்தது. இரண்டு நாள் தானே ஆச்சு போக போகத்தான் உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வரும்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.