மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ், கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
இதையடுத்து தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இதுதவிர மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த அருண் ஆண்டனி என்பவருக்கு நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை லிஜோமோல் ஜோஸுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.