இயக்குநர் செல்வராகவன் தன்னிடம் வேலைப்பார்த்து வந்த உதவி இயக்குநர் கீதாஞ்சலியை காதலித்து இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
இந்தத் தம்பதிகளுக்கு அழகான 3 குழந்தைகள் இருக்கின்றனர். குழந்தைகளுடன் இந்தத் தம்பதி இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுவருகிறது.
இந்நிலையில் தற்போது கீதாஞ்சலி தனது 35 ஆவது பிறந்தநாளை குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் படு உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். அதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு தனது அண்ணன் குழந்தைகளுடன் உற்சாகமாக அரட்டை அடிக்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
இவர்களைத் தவிர கீதாஞ்சலி பிறந்த நாளில் நடிகர் தனுஷின் அக்கா, நடிகை வித்யூலேகா ராமன் போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர். இயக்குநர் செல்வராகவன் முதல் முறையாக நடித்திருக்கும் “சாணிகாயிதம்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இதையடுத்து நடிகர் தனுஷுடன் இணைந்து செல்வராகவன் இயக்கவிருக்கும் “ஆயிரத்தில் ஒருவன்2”, மற்றும் “நானே வருவேன்” திரைப்படங்களின் தகவல்களை ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.