தமிழ் சினிமா உலகில் என்றென்றும் இளைய தளபதியாக விஜய் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருந்தது.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 65வது படம். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து உள்ளார்.
மேலும், இந்த டத்திற்கு அனிருத் இசைமைத்து உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து விஜய்யின் 66வது படம் குறித்த தகவலும் வெளியானது அனைவருக்கும் தெரிந்ததே.
1999-ஆம் ஆண்டு நடிகர் விஜய் அவர்கள் சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சிறு வயதிலேயே சினிமா மீது அதிகம் ஆர்வம் உடையவர். சஞ்சய்க்கு படம் இயக்குவதில் ஆர்வம் உள்ளதால் அதன் சம்பந்தமான படிப்பை லண்டனில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் தளபதி விஜயின் மகன் சஞ்சய் அவர்கள் மலையாளத்தில் டாப் நடிகர்களில் ஒருவரான நிவின் பாலியுடன் இணைந்து புகைப்படம் எடுத்து உள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நிவின் பவுலியின் ‘பிரேமம்’ படம் வெளியான போது அந்த படத்தை பார்த்துவிட்டு விஜய், நிவின் பாவுலியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடக்கது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.