HomeசினிமாCinema Newsடைட்டானிக் நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

டைட்டானிக் நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

ஹாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் என்றால் அது டைட்டானிக் படம் தான். 1997-ல் திரைக்கு வந்த டைட்டானிக் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் உலகில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், அவதார் படங்களுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

11 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது. இன்றளவும் டைட்டானிக் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் நடிகருமான டேவிட் வார்னர், புற்றுநோயால் 80 வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

- Advertisement -

இவர், 70 களில் வெளியான ஓமன், டாரன் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்திலும் நடித்துள்ளார்.

 

RELATED ARTICLES

Most Popular