ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் விரட்டியதால், அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் அந்த காதல் ஜோடிகள் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருக்கும் காந்தி – இர்வின் பாலம் அருகே காதலர்கள் இருவர், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த காதல் ஜோடி, திடீரென அங்குள்ள பாலத்தின் கீழே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் சென்று படுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளது.
இதனை அங்கு கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சிலர், சத்தம் போட்டு கூச்சலிடவே, அந்ப பகுதி வழியாக சென்ற பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
இதனால், அந்த காதல் ஜோடியை தண்டவாளத்தை விட்டு வெளியேறுமாறு அந்த மக்கள் சத்தம் போட்டு கூச்சலிட்டு இருக்கிறார்கள். எனினும், அவர்கள் அங்கிருந்து செல்லாத நிலையில், பொது மக்கள் எல்லோரும் சேர்ந்து, அந்த காதல் ஜோடியை துரத்தி உள்ளனர். இதில், பதற்றமடைந்த அந்த காதல் ஜோடி, அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், தலைமறைவானது.
இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்து காந்தி இர்வின் பாலம் அருகே சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அத்துடன், “காதலர் இருவர் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம்” குறித்து, அங்குள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கு வந்த ரயில்வே போலீசார், “அந்த காதல் ஜோடி யார், எதற்காக அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர்?” என்பது குறித்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.