தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.
திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக விவாகரத்தை அறிவித்தனர். அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு கிளாமரில் கலக்கி வருகிறார் சமந்தா.
சமந்தா தற்போது ’குஷி’ படத்தில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார் சமந்தா.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் நடத்தும் ’காபி வித் கரன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார். அப்போது தனுஷ் குறித்து ஒரே ஒரு வார்த்தையில் கூறும் படி கரண் கேட்க அதற்கு சமந்தா, ‘குளோபல் ஸ்டார்’ என கூறியுள்ளார். தனுஷுக்கு சமந்தா கொடுத்துள்ள பட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதையெல்லாம் வைத்து தனுஷுக்கு ‘குளோபல் ஸ்டார்’ என்ற பட்டத்தை கொடுத்துள்ளார் சமந்தா. தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.