in ,

நம்மல ஒதுக்குறாங்கன்னா, செதுக்குறாங்கன்னு அர்த்தம்… இசைவாணி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் ஒரு சிலர் தவிர கிட்டத்தட்ட அனைவருமே பல கஷ்டங்களை அனுபவித்து ஓரளவுக்கு முன்னேறியவர்கள் என்பது குறிபிடத்தக்கது.

அந்த வகையில் இன்றைய இரண்டாவது புரமோவில் இசைவாணி மற்றும் ஸ்ருதி இடையே நடைபெற்ற உரையாடலில், ‘நான் அழவே கூடாது என்று நினைத்தேன், ஆனால் என் அழுகை என்னை வலிமையாக்கியது, அதனால் நான் அழுவேன் என்று கூறுகிறார்.

அப்போது இசைவாணி ’நம்மை ஒரு சிலர் ஒதுக்குகிறார்கள் என்றால் அவர்கள் நம்மை செதுக்குகிறார்கள் என்று அர்த்தம் என்று அவரது கருத்தை ஆமோதிக்கின்றார்.

மேலும் நம்மை நிறைய இடத்தில் நம்முடைய கலரை வைத்தே நம்மை ஒதுக்குவார்கள் என்று ஸ்ருதி கூறியபோது, இசைவாணி ’எதை ஒருவர் ஒதுக்குகிறார்களோ அதுதான் தனியாக தெரியும் என்று கூறினார்.

நம்மை கலரை வைத்து பலர் கேலியும் கிண்டலும் செய்தார்கள் ஆனால் இந்த வீட்டில் நான் இங்கே இருப்பதற்கு காரணம் அந்த கலர் தான் என்று ஸ்ருதி ஆணித்தரமாக கூறுகிறார்.

மேலும் எனக்கு இந்த கஷ்டமெல்லாம் வரவில்லை என்றால் இந்த வீட்டிற்கு நான் வந்திருக்க மாட்டேன் என்றும் அவர் கூறுவது ஏற்று கொள்ளக்கூடிய உண்மையாகவே உள்ளது.

 

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

500 ரூபாய்க்காக மனைவியை அடுத்தவர்களுடன் உல்லாசத்துக்கு அனுப்பிய கணவன்!

செல்வராகவன் வீட்டு விசேஷத்தில் நடிகர் தனுஷ்… வைரல் புகைப்படங்கள்