Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நயன்தாரா திருமண தேதி முடிவு செய்யப்பட்டதா? கல்யாணத்திற்கு விக்னேஷ் சிவன் இப்படி ஒரு சாங்கியம் செய்கிறாரா..

பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு முன் தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நடித்து முடித்து விட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

சில நாட்களாக ஓய்ந்திருந்த இவரகளது திருமணம் குறித்த பேச்சு மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது. நயன்தாராவை திருமணம் செய்ய விக்னேஷ் சிவன் சில சாங்கியங்களை செய்ய உள்ளாராம்.

நயன்தாரா ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனைக்காக முதலில் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்ட பின்னரே, நயனை திருமணம் செய்ய வேண்டும் என ஜோசியர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.

ஏற்கனவே இதே போல் பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக அபிஷேக் பச்சனை இதே போன்ற சில சாங்கியங்களை செய்ததாக கூறப்படுகிறது.

இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாகவும், இவரகளது திருமண தேதியை… திருமலை திருப்பதி புரோகிதர்கள் நிர்ணயித்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஏற்கனவே நயன்தாரா கொடுத்த பேட்டியில்… நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்திருந்தாலும் திருமணம் அனைவருக்கும் தெரியும்படி மிக பிரமாண்டமாக நடக்கும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.