Malayagam
Home » நள்ளிரவில் நிலவை பார்த்த இரண்டு சகோதரர்கள் பலி! கதறிய உறவினர்கள்

நள்ளிரவில் நிலவை பார்த்த இரண்டு சகோதரர்கள் பலி! கதறிய உறவினர்கள்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 14 வயதுடைய சத்ய நாராயணன் மற்றும் சூரிய நாராயணன் என்னும் இரட்டை மகன்கள் உள்ளனர்.

இந்த சிறுவர்கள் இருவரும் அங்கு 9ஆம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நாள் இரவு சிறுவர்கள் இரண்டு பேரும் பால்கனிக்கு சென்று நிலவை பார்க்க வேண்டும் என்று தாயிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த தாய், அறையை விட்டு வெளியே வரக்கூடாது இருவரும் உறங்குங்கள் என்று கூறிவிட்டு அவரது அறைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் 1 மணி அளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த தாய் மகன்களின் அறைக்கு சென்றுள்ளார்.

சிறுவர்கள் இருவரும் அறைக்குள் இல்லாததால் பால்கனிக்கு வந்துள்ளார். அப்போது, சிறுவர்கள் இருவரும் பால்கனியில் இருந்து தவறி குடியிருப்புக்கு வெளியே விழுந்துள்ளனர்.

மேலும் 25-வது மாடியில் இருந்து விழுந்த இரண்டு சிறுவர்களையும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையேம் சம்பவம் அறிந்து வந்த காசியாபாத் போலீசார் சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று சிறுவர்களின் தந்தை ஊரில் இல்லை என்றும் வீட்டில் தாய் மற்றும் உறவினர் இரண்டு பேர் மட்டும் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், பால்கனியில் நின்று நிலாவை பார்க்க சென்றவர்கள் தவறி விழுந்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed