பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஆரம்பத்தில் தாமரை செல்வியுடன் மல்லுக்கட்டிய நமீதா இறுதியில் அவருடன் சமாதானமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் ஆட்டம் பாட்டம், சண்டை சச்சரவு என நிகழ்ச்சி களைக்கட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய புரமோவில் தாமரை செல்விக்கும் நமீதாவுக்கும் இடையே மோதல் ஏற்படுவதாக காட்டப்பட்டது. நமீதா தாமரையிடம் சண்டை போடுவதாக இருந்தது.
புரமோவை பார்த்த நெட்டிசன்கள் நிகழ்ச்சியில் என்ன ஆகுமோ என்று மிரண்டு போயிருந்தனர். அதேநேரத்தில் நமீதா பிராங்க் பண்ணுகிறாரோ என்றும் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் விளையாட்டாக ஆரம்பித்த சண்டை வில்லங்கமானது.
நமீதா மாரிமுத்துவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. சொல்லப்போனால் தாமரை செல்வி எதுவும் தவறாக பேசியது போல் தெரியவில்லை. ஆனால் சிறு விஷயத்திற்காக கோபப்பட்ட நமீதா, அவரை அசிங்கம் அசிங்கமாக கேட்பேன் என்றும் சிரிச்சு சிரிச்சு ஊரை ஏமாத்துறீங்க என்றும் கடுமையான சொற்களை பயன்படுத்தினார்.
இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமரை செல்வி மன்னிப்பு கேட்டும் நமீதா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கண்ணீர் விட்டார் தாமரை செல்வி. இந்நிலையில் நேற்றைய எபிசோடின் இறுதியில் தாமரை செல்வியுடன் சமாதானமாகிவிட்டார் நமீதா.
அதிகாலை 4 மணி அளவில் தாமரை செல்வி கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நமீதா பீம் பேக்கை போட்டு அருகில் அமர்ந்தார். பின்னர் தாமரை செல்வியை எழுப்பிய அவர் நான் மன்னித்துவிட்டேன், நீங்கள் உள்ளே போய் படுங்கள் என்று கூறினார்.
நமீதா பேசியதும் மறுப்பு எதுவும் பேசாமல் உள்ளே சென்றார் தாமரை செல்வி. பின்னர் தாமரை செல்வியிடம் டீ போட்டு கொடுக்கவா? குடிக்கிறீங்களா என்று கேட்டார் நமீதா. அதற்கு தாமரை செல்வி ஓகே சொல்ல அவருக்கு டீ போட்ட நமீதா உங்கள் தங்கச்சியிடம் இருப்பது போல் அன்பாய் இருங்கள் என்றார். ஒரு வழியாக இருவரும் சமாதானம் ஆனதை பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.