Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நேரடியாக விஜய் சேதுபதியுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா.!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் எஸ்.ஜேய்.சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தில் தனுஷ் கோடி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார்.

இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவரது நடிப்பில் பொம்மை, கடைமயை செய் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் கடமையை செய் படத்தை இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தை தமிழகத்தில் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடவுள்ளது.

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன் மற்றும் சேசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆனால், இதற்கு முன்பே ஜூன் 24-ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனையடுத்து விஜய் சேதுபதி படமும், எஸ்.ஜே.சூர்யாவின் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

இதனால், எந்த படம் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எந்த படம் அதிகம் வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.