தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகி, நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதுதவிர, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் சர்காரு வாரி பாட்டா மற்றும் சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், புதிதாக கமிட்டாகியுள்ள தெலுங்கு படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை ஏற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2.5 கோடி சம்பளம் வாங்கி வந்த கீர்த்தி, தற்போது 3 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.
கதாநாயகியாகவும், சோலா ஹீரோயினாகவும் கலக்கி வரும் நடிகை கீர்த்தி, இனி கமிட்டாகும் படங்களுக்கு ரூ. 3 கோடி அல்லது அதற்கும் மேல் தான், சம்பளம் வாங்குவார் என்று கூறப்படுகிறது.
மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த கடந்த சில படங்கள் பென்குயின், ரங் டே, மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments