பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிஸ் ட்ரஸின் சொகுசு வீடுகள் மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் புதிய பிரதமர் லிஸ் தொடர்பிலான சில சுவாரசிய விடயங்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு ஊடகங்களின் தகவலின்படி லிஸ் ட்ரஸின் நிகர சொத்து மதிப்பு $10 மில்லியன் ஆகும். அவரது ஊதியம் ஆண்டுக்கு $450,000 என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவரது கார் சேகரிப்பில் காடிலாக் எஸ்கலேட், லேண்ட் ரோவர் டிஃபென்டர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகியவை அடங்கும்.
லிஸ் ட்ரஸ் Norwich கவுண்டியில் £180,000 மதிப்பில் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு வீட்டை வாங்கினார். அங்கு தான் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அவர் வசிக்கிறார்.
அந்த வீட்டின் தரை தளம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் மதிப்பு இப்போது £250,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதே போல லண்டனிலும் லிஸ் ட்ரஸுக்கு வீடு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அது எங்கே உள்ளது என்று சரியாக தெரியவில்லை.