Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியில் பிரசாந்த் என்பவர், சாமியாராக இருக்கிறார்.

இந்த சாமியார், அந்த பகுதியில் உள்ள கோயில் அமர்ந்து குறி சொல்லி வந்திருக்கிறார். இதனால், இந்த சாமியார் அந்த பகுதி மக்களிடையே சற்று பிரபலமானவராக இருந்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அந்த மாணவி தனது தாயாருடன் சமீபத்தில் அந்த சாமியாரிடம் குறி கேட்பதற்காக சென்று உள்ளார்.

அப்போது, அந்த மாணவியை பார்த்ததுமே, சபலப்பட்ட அந்த சாமியார், திட்டமிட்டபடியே, அந்த மாணவியை அடிக்கடி அழைத்து பேசி அறிவுரை வழங்குவது போல், “நன்றாக படிக்க வைக்கிறேன்” என்று, சொல்லி பலவிதமான ஆசை வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறார்.

இப்படியாக, தொடர்ந்து அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் மூலம் பேசி, அந்த மாணவியை அந்த சாமியார் தன் வசியப்படுத்தி உள்ளார்.

இதனையடுத்து, அந்த 12 ஆம் வகுப்பு மாணவியும் அந்த சாமியாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்திருக்கிறார்.

அப்படியான தருணத்தில், அந்த பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த அந்த சாமியார், “இதனை யாரிடமும் வெளியில் சொல்லக் கூடாது” என்றும், மிரட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும், அந்த மாணவியை தன்னை பார்க்க அடிக்கடி வரவழைத்த அந்த சாமியார், தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த சாமியாரின் பாலியல் தொல்லைகள் அதிகமானதால், வேறு வழியில்லாமல் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அந்த மாணவி அழுதிருக்கிறார்.

இதனைக்கேட்டு, கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த சாமியார் மீதான பாலியல் புகார் உறுதியானது.

இதனையடுத்து, அந்த போலி சாமியார் பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸ், அவரை கைது செய்து அதிரடியாக சிறையில் அடைத்தனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.