Malayagam
Home » பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்; நெஞ்சு வலி காரணமா?

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்; நெஞ்சு வலி காரணமா?

கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி, இந்நி திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும்போது மயங்கி கீழே விழுந்தார்.

உடனே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ராஜுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், 40 நாட்கள் கழித்து இன்று ராஜு ஸ்ரீவஸ்தவா உயிரிழந்துள்ளார்.

சமீபத்தில் இந்தி பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டிருந்த ராஜு, ஸ்டாண்ட் அப் காமெடிகளுக்கு பெயர் போனவர். தனது திரையுலக வாழ்க்கையை ஸ்டாண்ட் அப் காமெடிகள் மூலம் திறந்தார். பின்னர், ’மைனே பியார் கியா’, ’ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’, பாசிகர் போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார்.

ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை கலைஞர்கள் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed