Malayagam
Home » பூமியில் நீர் தோன்றியது எப்படி தெரியுமா? ஆய்வில் வெளியான ஆச்சரியம்

பூமியில் நீர் தோன்றியது எப்படி தெரியுமா? ஆய்வில் வெளியான ஆச்சரியம்

ஜப்பானிய விண்வெளிப் பயணத்தில் சேகரிப்பட்ட அரிய மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இவை ரியூகு என்ற சிறுகோளில் இருந்து 2020ஆம் ஆண்டில் பூமிக்கு கொண்டுவரப்பட்டவை ஆகும். கார்பன் பொருளால் நிறைந்த சி வகை சிறுகோளான ரியூகு, பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனையும், சூரிய குடும்பத்தின் கிரகங்களையும் உருவாக்கிய நெபுலாவில் இருந்து உருவாகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். Nature Astronomy இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில்,

‘ரியூகு மாதிரிகள் வாயிலாக பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல்கள் எவ்வாறு தோன்றின என்ற மர்மத்திற்கு விடை கொடுக்க முடியும்.

கொந்தளிப்பான மற்றும் கரிமம் நிறைந்த சி-வகை சிறுகோள்கள், பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

இந்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட ரியூகு துகள்களில் காணப்படும் கரிமப் பொருட்கள், ஆவியாகும் பொருட்களின் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed