Mon, Dec5, 2022

#Trending

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக த்ரிஷா… புகைப்படம் வெளியானது

பொன்னியின் செல்வன் படத்தின் ஆதித்திய கரிகாலன் , வந்தியத்தேவன் , பழுவூர் ராணி நந்தினி , ஆகிய கதாபாத்திரங்கள் தோற்றங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது குந்தவையாக நடித்துள்ள த்ரிஷாவின் தோற்றப் புகைப்படம் வெளியாகியுள்ளது .

எழுத்தாளர் கல்கியின் “பொன்னியின் செல்வன் ” என்ற நாவலை மணிரத்தினம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கவுள்ளார் .அதனுடைய முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 தேதி வெளியாகிறது என படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது .

இந்த படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா,பிரகாஷ் ராஜ்,ஜெயராம்,பிரபு,ரகுமான் போன்ற நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றன .இந்த படத்தை லைகா நிறுவனம் பெற மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இந்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையும் மற்றும் ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 தேதி வெளியாகிறது என்ற செய்தியினை “வருகிறான் சோழன் ” என்ற தலைப்புடன் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்தது.

இந்தப் படத்தில், சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் ஆதித்திய கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமின் தோற்றத்தைப் படக்குழு ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியின் தோற்றமும் வெளியானது.

அந்தப் போஸ்டரின் கேப்ஷனாக ‘ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன்… இதோ வந்தியத்தேவன்!’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்று, பழுவூர் ராணி நந்தினியின் தோற்றமும் வெளியிடப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இந்தப் புகைப்படத்துக்கு கேப்ஷனாக ‘பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியைச் சந்திக்கவும்!” என்று பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷாவின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”ஆண்களின் உலகில் தைரியமான பெண். இளவரசி குந்தவை” என பதிவிடப்பட்டுள்ளது.

நாளை மாலை 6 மணிக்கு “பொன்னியின் செல்வன் பாகம் – 1” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை டிரேட் சென்டரில் நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities