Malayagam
Home » மறைந்தார் பிரபல நடிகர்.. ரசிகர்கள் கண்ணீர்..

மறைந்தார் பிரபல நடிகர்.. ரசிகர்கள் கண்ணீர்..

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்பவர் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவரான இவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகருமான ராஜ்குமார் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் பணைய கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புனித் ராஜ்குமார் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தாக இருப்பதாகவும், தற்போதைய நிலையில் எதையும் உறுதியாக சொல்லும் வகையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித் ராஜ்குமார் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும்போதே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், தற்போது அவர் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும் விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் தெரிவித்துள்ளார்.

புனித் ராஜ்குமார் கவலைக்கிடமாக இருக்கும் தகவல் அறிந்து ரசிகர்கள், சக திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர் நலமடைந்து திரும்பிவர வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி அறிந்து ரசிகர்களும், கன்னட, தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார், திரையுலக ஜாம்பவான்களான ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோரின் மகனாவார். திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான புனித் ராஜ்குமார் 29துக்கு மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

1985ம் ஆண்டு பெட்டடா ஹூவு என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார். மேலும் சலிசுவா மொதகழு, எர்ரட நக்ஷத்ரகழு போன்ற படங்களுக்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.

2002ம் ஆண்டு அப்பு என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமானார். அப்போதிலிருந்து அவரின் ரசிகர்கள் அவரை அப்பு என செல்லமாக அழைத்து வருகின்றனர். அபி, வீர கன்னடிகா, அஜய், அரசு, ராம், ஹுதுகரு, அஞ்சனி புத்ரா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றிருக்கிறார். இவரின் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுவரத்னா என்ற படம் ரீலீஸ் ஆகி இருந்தது.

1999ம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்த புனித் ராஜ்குமாருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். புனித் ரஜ்குமாரின் குடும்பம் முழுவதுமே திரைத்துறையில் தான் உள்ளனர்.

சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என அவரின் இரண்டு சகோதரர்களும் நடிகர்களாக உள்ளனர். மேலும் இவரின் சகோதரரின் இரு மகன்களான வினய் மற்றும் யுவா ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர். இவர்கள் குடும்பத்தில் புனித் ராஜ்குமாருடன் சேர்த்து 12 பேர் திரைத்துறையில் நடிகர்களாகவும், இயக்குமர்களாகவும், நடிகையாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed